தீவிர மழைப்பொழிவு சமயமான இந்த நேரத்தில் மாதக்கணக்கில் கிராமங்களுக்கு சப்ளை தரவில்லை என்றும் குடோன் அமைந்துள்ள பெத்தளாவிற்கு சென்றால் குடோனை பூட்டி விட்டு சென்றுள்ளதாகவும் கேட்டால் டெலிவரி பணிக்கு சென்றுள்ளதாகவும் ஸ்டாக் இல்லை என்றும் தொலைபேசியில் அழைத்தால் பதில் அளிக்காமலும் உள்ளதாக கட்டபெட்டு நடுஹட்டி கிராமண பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பள்ளி குழந்தைகள் உள்ளவர்கள் மற்றும் விவசாயிகள் சிலிண்டர் தேவைக்காக மிகவும் கஷ்டப்பட வேண்டியள்ளதால் இந்த பிரச்னையை உடனடியாக சரி செய்ய வேண்டும் இல்லையெனில் கட்டபெட்டு பகுதியில் அமைந்துள்ள எச்.பி நிறுவணத்திற்கு தங்களது இணைப்பை மாற்றித்தரவேண்டும் எனவும் இல்லையெனில் மாவட்ட ஆட்சியரிடம் கிராம பொதுமக்கள் மொத்தமாக சென்று முறையிட வேண்டி வரும் எனவும் கட்டபெட்டு பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....


No comments:
Post a Comment