பந்தலூர் பகுதி காலனி அட்டி என்று சொல்லக் கூடிய பகுதியில்60வருடங்களுக்கு முன் குடியேரி வாழ்ந்து வந்தனர் இங்கு தற்போது சுமார் 180.குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் . இவர்களுக்கு அப்போது சரியான நடைபாதை இல்லை அதன் பின் நெல்லியாள பஞ்சாயத்துக்கு பல மனு கொடுத்து நடைபாதை போடப்பட்டது .
இன்னிலையில் பல இடங்களில் நடைபாதை உடைத்து உறுகுலைந்து காணப்படுகிறது இருபது வருடங்களாக நடைபாதை சீர் படுத்தாமல் இருப்பதால் மக்கள் அந்த நடை பாதையை பயன் படுத்நுவது சிரமமாக உள்ளது .

மேலும் அந்த பகுதியில் யாராவது இறந்து விட்டால் அந்த உடலை புகைக்க எடுத்துச் செல்வது மிக கடினம் குண்டும் குழியுமாக இருக்கும் அந்த குழியில் தான் நடக்கனும் அப்படி நடக்கும் போது சில நேரங்களில் கால் மாட்டிக் கொள்ளும் இரவு நேரங்களில் தெரு விளக்கு இல்லை என்றாலும் அதில் நடப்பது கஸ்டம் இதனால் பல இன்னலுக்கு ஆளாகின்றனர்.
இன்னிலை பல சிரமத்திற்கு மத்தியில் வாழக்கூடிய நிலைமை உள்ளனர் அப்பகுதி மக்கள் பழனி படிகட்டுபோல் அந்த படியில் தான் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய நிலை உள்ளது. உறுகுலைந்த படிகட்டை சீர் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அந்த நடை பாதையை விரைவில் புது நடை பாதை அமைத்து தந்தால் உதவியாக இருக்கும் அப்பகுதினர் கேட்டுக்கொண்டதாக தன்னார்வலர் முருகன் போன்றோர் தெரிவித்துள்ளனர்....
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா கான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment