ஓவேலி அரசுப் பள்ளியில் நீலகிரி கூடுதல் உரிமையியல் நீதிபதி பிரகாசம் தலைமையில் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 November 2022

ஓவேலி அரசுப் பள்ளியில் நீலகிரி கூடுதல் உரிமையியல் நீதிபதி பிரகாசம் தலைமையில் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரகாசம் தலைமையில் மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


ஓவேலி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான நாட்டு நலப்பணி திட்ட  சிறப்பு முகாம் 7 நாட்கள் நடைபெற்றது, முகாமின் திட்ட அலுவலர் ஸ்டீபன் தலைமையில் 30 மாணவர்கள் கொண்ட குழு கடந்த ஏழு நாட்களாக பல்வேறு பகுதிகளில் தூய்மை மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

 

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது, விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் எலியாஸ் தலைமை வகித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நீலகிரி மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரகாசம் தலைமையில் போக்சோ சட்டம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.


மாணவ மாணவிகளிடையே பேசிய நீதிபதி போக்சோ சட்டம் என்பது மிகவும் கடுமையான சட்டம் 18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அனைத்து வகையான குற்றங்களிலும் ஈடுபடுபவருக்கு நிபந்தனையற்ற கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் குழந்தை திருமணங்களை அறவே தடுக்கப்பட வேண்டும் போதை பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் அவர்களுக்கு துணையாக இருப்பவர்களையும் கடுமையான சட்ட விதிமுறைகள் பின்பற்றி தண்டிக்க வழி வகைகள் உள்ளது, எனவே மாணவர்களும் பெற்றோர்களும் ஒன்றிணைந்து போதைப் பொருட்கள் பயன்பாட்டினை முற்றிலுமாக தடுத்திட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கூடலூர் வழக்குரைஞர்கள் சங்க தலைவர் ஜைனுல் பாபு பேசும்போது அனைத்து பொது மக்களும் இலவச சட்ட உதவி மையத்தை அணுகி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வகையான இலவச சட்ட உதவிகளையும் சான்றிதழ்களையும் பெறுவதற்கு துணை நிற்போம் என்று தெரிவித்தார்.


கூடலூர் நகைச்சுவையாளர் மன்றத்தின் செயலாளர் அருண்குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது எதிர்வரும் காலங்களில் அனைத்து பள்ளிகளிலும் நகைச்சுவை மன்றம் தொடங்கி அதன் மூலம் மாணவர்களுக்கு பல்வேறு வகையான திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சி வழங்கப்படும் என்றும் , அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மன்றத்தின் மூலம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.


மேலும் வறுமையால் உயர் கல்வி தொடர முடியாத மாணவ மாணவிகளுக்கு அனைத்து வகையான கல்வி கட்டணங்களும், செலுத்தி படிக்க வைக்க உறுதி ஏற்பதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் நியூ ஹோப் காவல் உதவி ஆய்வாளர் கணேசன், ஓவேலி பேரூராட்சி மன்றத்தலைவர் சித்ராதேவி, துணை தலைவர் சகாதேவன், ஓவேலி பேரூர் கழக நிர்வாகி செல்வரத்தினம், பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் முன்னதாக ஆசிரியை கவிதா அனைவரையும் வரவேற்றார் ஆசிரியை மீரா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர் நாகராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் ராஜா கான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.... 

No comments:

Post a Comment

Post Top Ad