நீலகிரி மாவட்ட ஆட்சியர் திரு சா.ப.அம்ரித் இ ஆ ப அவர்களின் உத்தரவின் பேரில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் குன்னூர் வட்டத்தில் உள்ள எடப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம், பேரிடர் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள், முதியோர் இல்லம் ஆகியவற்றை தணிக்கை மேற்கொண்டனர். மேலும் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் கல்லூரி மாணவியர்களுக்கான பேரிடர் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகள் கருத்து தெரிவிக்கும்போது இந்த பயிற்சி எங்களுக்கு மிகுந்த உதவியாக இருந்தது அதுமட்டுமல்லாமல் எங்கள் பகுதியில் இதுபோன்ற நிலை ஏற்ப்பட்டால் எவ்வாறு துரிதமாக செயல்படுவது என்பது குறித்து பயிற்சி அளித்தார்கள் இந்த பயிற்சியை அளித்த அனைவருக்கும் நன்றி என கூறினார்கள்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.


No comments:
Post a Comment