எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் சார்பில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 11 November 2022

எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் சார்பில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம்.

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் சார்பில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாமானது நடைபெற்றது. இந்த முகாமை அரசு மருத்துவர் திரு முருகேஷ் மற்றும் இத்தலார் ஊராட்சி மன்ற தலைவர் திரு பந்தயமன் அவர்களும் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தனர்.


இந்த சிறப்பு முகாமில் பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பல்வேறுபட்ட நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர் இதில் குழந்தைகள் நல மருத்துவர், பல் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், சர்க்கரை நோய் மற்றும் இருதய நோய் மருத்துவர், கண் மருத்துவர், பொது மருத்துவர், எலும்பு சிகிச்சை மருத்துவர், தோல் மருத்துவர், மற்றும் சித்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.


இந்த முகாமில் இலவசமாக ரத்த பரிசோதனைகளும் செய்யப்பட்டது இதில் ரத்த வகை ரத்தத்தில் உள்ள ஹெச்பியின் அளவு ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு சிறுநீரில் உள்ள உப்பு மற்றும் சர்க்கரை அளவுகள் கண்டறியும் சோதனைகள் இலவசமாக மேற்கட்டப்பட்டது மேலும் உயர் ரத்த அழுத்த பரிசோதனை இசிஜி கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்று நோய்களுக்கான பரிசோதனை மற்றும் கற்பிணி பெண்களுக்கான ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது கண்புரை உள்ளவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சைக்கும் பரிந்துரை செய்தனர் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிக்கு பரிந்துரை செய்தனர் சித்த மருத்துவத்தின் மூலம் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது.


இந்த சிறப்பு முகாம் ஆனது நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சா ப அம்ரித் இ ஆ ப அவர்களின் ஆணை படியும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் நீலகிரி மாவட்டம் அவர்களின் அறிவுரை படியும் நடைபெற்றது.

எமரால்டு சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த பல்வேறு பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் மருத்துவர் பிரிவுகளை அணுகி மருத்துவர்கள் ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகள் மற்றும் உயர் சிகிச்சைக்கே தேவைப்படுபவர்கள் ஆணைகளையும் பெற்றுச் சென்றனர். இதைப் பற்றி பொதுமக்கள் கூறும் பொழுது இந்த சிறப்பு முகம்மது எவரால் பகுதிக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேலும் இந்த சிறப்பு முகாமை ஏற்பாடு செய்து கொடுத்த தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மாவட்ட சுகாதாரத் துறையின் இருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்..


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு... 

No comments:

Post a Comment

Post Top Ad