பந்தாலுரில் திமுக பொதுக்கூட்டம், ஆ ராசா பங்கேற்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 11 November 2022

பந்தாலுரில் திமுக பொதுக்கூட்டம், ஆ ராசா பங்கேற்பு.

நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்த தேவாலா பகுதியில் திமுகவின் பொதுக்கூட்டத்தில் இரு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்   இதில் ஏராளமான திமுக கட்சி தொன்டர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

பந்தலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில்  நீலகிரி மாவட்ட தி மு க சார்பில்  பொது கூட்டம் நடை பெற்றது  இந்த  கூட்டத்திற்கு  மாவட்ட திமுக செயலாளர் பாமு முபராக் தலைமை தாங்கினார் நிகழ்ச்சி வந்தோர்களை பந்தலூர்  நகர செயலாளர்  சேகர் வரவேற்புரை நிகழ்த்தினார்  கூட்டத்திற்கு சிறப்பு விருந்நினராக திமுக பொது துனை செயலாளரும் நீலகிரி  நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.இராசா, வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும்  தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திராவிடமணி, காசிலிங்கம், முஸ்தப்பா, கேஎம்.ராஜீ, பந்தலார் ஒன்றியம் சிவானந்தராஜா, கிழக்கு ஒன்றியம் சுஜித், சிஜடியு  தொழிற் சங்க தலைவர்கள் மாடசாமி  எல்பிஎப்பெரியசாமி, நெல்லியாள நகர மன்ற தலைவர் சிவகாமி, முன்னால் நகர மன்ற தலைவர் அமிர்தலிங்கம், கூடலூர் நகர செயலாளர் பாபு .எ.இளஞ்செழியன் , ஒன்றிய செயலாளர் லியகத்தலி,  கூடலூர்  நகர மன்ற தலைவி பரிமளா, ஓவேலி பேரூராட்சி தலைவி சித்ரா, நீலகிரி  மாவட்ட துனை செயலாளர் ரவிகுமார்   ஒன்றியம் பிரேம்குமார், திமுக மாவட்ட பொருலாளர் நாசர்அலி மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள், மாணவர் அணி, மகளிர் அணி,  வர்ந்தக அணி,  வழக்கறிஞர் அணி ஸ்  திமுக கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் பேசுகையில்  தேயிலைத் தோட்டத்தில் 4300 பேர் பனி புரிந்து வருகின்றனர் பனி ஒய்வு பெருகின்ற அனைவருக்கும் கிராம வளர்ச்சி துறை மூலம் வீடுகள் கட்டித்தரப்படும் என்றார்.


தேயிலைத்தோட்டங்களில் பனி புரிகூடிய பனியாளர்க்கு வேலை இல்லை என கூறுவதில்லை எந்தனை பேர் வந்தாலும் வேலை உண்டு என்றார், மேலும் நாடுகானி பகுதியில் தங்க சுரங்கத்தில் பனி புரிபவர்கள்  அதிக அளவு உயிரிழப்பு ஏற்படுகிறது, இதை தவிர்க்கும் பொருட்டு  இவர்களையும் டேன்டியில் சேர்ந்து பனியாற்ற வாய்ப்பு தருகிறோம், டேன்டியில் பனியாற்றியவரின் பிரபிடன் பன்ட் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், தேயிலை தோட்டங்களில் வேலை செய்யக்கூடியவர்களை வீட்டை விட்டு காலி செய்யச்சொல்வதை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு முறைப்படி மாற்று வீடுகள் வழங்கிய பிறகு காலி செய்ய வேண்டும் என டேன்டி நிர்வாகத்திடம் சொல்லி இருக்கிறோம்  என்றார்.
டேன்டி மக்களுக்கு உதவி செய்ய ஆ ராசா பதவியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் மக்களுக்கு பிரச்சனை என்றால் ஓடி வருவார் மழைகால இடர்கள், கொரோனா பதிப்புகள் என பல இன்னல்களை சந்திக்கும் பொழுது அவர் இங்கு ஓடி வந்து உதவி  வருபவர் என்றார்.


மக்கள் வாழக்கூடிய செக்சன் செவன்டீன் நிலம் என்று சொல்லி சில இடங்கள் உள்ளவைகலை ஆய்வு செய்து அந்த இடத்தில் அளவுகள் மேற்கொள்ளப்பட்டு மீதி உள்ள இடங்களை பட்டா வழங்க மேற் கொள்ளப்படும்  என்றார், தளபதியார் மக்களின் மேல் அதிகளவு அக்கரை கொண்டவர்  அதிலும் நீலகிரி மாவட்ட மக்களின் மீது அதிகளவு பாசம் கொண்டவர்.


தளபதியார் எப்போதும் என்னிடம்  நீலகிரி மக்களைப்பற்றி கேட்பார் என கூறினார்  நமக்கு கிடைத்துள்ள முதல்வர் போல் யாருக்கும் கிடைத்திருக்க மாட்டார் என புகலாரம் சூட்டினார்.


ஆ.இராசா பேசுகையில்  டேன்டி மக்ளின் நிலைமையை ந தளபதியாரிடம் பலமுறை பேசியுள்ளேன் டேன்டீ மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மேசமான நிலையில் உள்ளது என்றும் அவர்களின் இன்னல்களையும் எடுத்து சொன்னேன் என்றார், மேலும் இதன் சம்மந்தமாக டேன்டீ இயக்குனர்களையும் முபராக் அவர்கள் ராமசந்திரன் அவர்கள் அனைவரையும் என் வீடில் வரவழைத்து பேசி தீர்மானித்து மீண்டும் தளபதியாரிடம் பேசிய பின் உங்கள் மேல் வைத்த பாசத்தால் உங்களை மீண்டும் காண வந்துள்ளேன் என்றார்.


கலைஞர் எட்டடி பாய்ந்தால் தளபதியார் அதை விட பல மடங்கு  தான்டி பல சாதனைகளை செய்து வருகிறார் என்றார், தமிழகத்தில் தற்போது பத்து அரசு கல்லுரி வர உள்ளது அதில் தோட்டத்தொழிலாளர்கள் மலைவாழ் மக்கள் பகுதிக்கு அரசு கலை கல்லூரி தாலவாடி பகுதிக்கு ஒருகல்லூரி வங்கி தந்ததாக கூறினார்.


தமிழ் நாட்டில் ஐடி பார்க் வெகு விரைவில் கட்டப்பட உள்ளது இதில் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார். மேலும் அஇஅதிமுக  ஆட்சியில் கொரோனா பிடியில் சிக்கி தவித்தோம்  அப்போது மருத்துவ மனையில் ஆக்சிசன் பற்றாக்குரை  நோய் தாக்கம் அதிகம் இந்த சூழலில் அரசு அறிவித்தது ஒருவரை ஒருவர் தொடக்கூடாது வெளியே வர கூடாது  என்றார்கள்.


இந்த நேரங்களில் மோடி வெளியே வந்தாரா அல்லது பழனிசாமி வந்தாரா மக்களை தொட்டு பேசினார இல்லையே நமது தளபதியார் கொரோனா தடுப்பு கவசத்தை அனித்து மக்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.


அந்த காலகட்டத்தில் நமது கழக தொன்டர்களுக்கு  அனையிட்டு  கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய  சொன்னார்  இதில் பனி செய்த பல மந்திரிகள் மருத்துவமனை மருத்துவர் செவழியர் பாதிக்கப்பட்டனர் சில மந்திரிகளையும்  நாம் இழந்தோம் என்றார்.


இந்த சூழலில் 90 சத விகிதம் நிதி நெருக்கடியை குறைத்தார் அனைத்து நல திட்டங்களை வழங்கினார். நீலகிரி மாவட்டத்தின் மீது தனி கவனம் செலத்தினார், மேலும் தற்போது கிராம நகர் புரங்களில் மின்சாரம் வசதி இல்லை அதை வெகு விரைவில் மின்சார வசதி கிடைக்க வெகு விரைவில்  நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா கான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad