அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளைப்பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்றயதினம் (22-11-2022) நடைபெற்றது. இதில் டாக்டர் வினோலியா சிறப்புரையாற்றினார். வார்டு உறுப்பினர்கள் திருமதி. வெண்ணிலாசேகர், . திருமதி. ஆபிதாஅபுதாஹீர் ஆசிரியபெருமக்கள், மற்றும் பள்ளிமேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
உடலளவில் குறை உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் உள்ளம் ஊனமுற்று இருக்கக்கூடாது என்று தலைவர் கலைஞரால் மாற்று திறனாளிகள் என்று அன்போடு அழைக்கப்பட்டவர்கள். எனவே குழந்தைகளிடம் வேற்றுமை பார்காமல் கருணையோடு அவர்களை அரவணைக்க வேண்டும் என்றும் சகமாணவர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப் பட்டது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜகான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.



No comments:
Post a Comment