கூடலூர் பாடந்துறை சாலையில் வாகன விபத்து. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 7 November 2022

கூடலூர் பாடந்துறை சாலையில் வாகன விபத்து.

நீலகிரி மாவட்டம் கூடலூர் இருந்து பாடந்துறை செல்லும் சாலையில் இன்றைய தினம் கூடலூரில் இருந்து பாடந்துறை சென்ற ஆட்டோவும் கர்நாடகாவில் இருந்து உதகை சென்ற காரும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது.  விபத்தில் ஆட்டோவில் இரண்டு பேர் பயணித்த நிலையில் ஆட்டோவில் பயணித்த கல்லூரி மாணவிக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ஆட்டோவில் பயணித்த இன்னோரு நபருக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. 

இதனை தொடர்ந்து மூவரும் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.  மேலும் இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கூடலூர் - பாடந்துறைக்கு செல்லும் சாலையில் கார், ஆட்டோ மட்டுமின்றி அனைத்து வகையான வாகனங்களும் அதி வேகமாக இயக்கப்படுவதாலேயே வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே மேலும் விபத்து ஏற்படாத வண்ணம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


- தமிழக குரல் இணையதள செய்தியாளர் ராஜா கான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.... 

No comments:

Post a Comment

Post Top Ad