தேவர் சோலை பேரூராட்சி இரண்டாம் வார்டு மற்றும் மூன்றாம் வார்டு பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியின் அருகாமையிலும் பழங்குடியினர் குடியிருப்புகள் அருகாமையில் அமைந்துள்ள உயர் அழுத்த மின் கம்பியில் கொடிகள் சூழ்ந்து காடுகள் போல் காட்சி அளித்தது.
அதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் யாருக்காவது அசம்பாவிதம் ஏற்படும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் எனது கிராமம் எனது உரிமை என்ற whatsapp குழுவில் புகார் அளித்தனர்.

இதை அறிந்த எனது கிராமம் எனது உரிமை whatsapp குழுவை சார்ந்த உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின் கம்பியில் படர்ந்து இருந்த கொடிகளே அகற்றி சுத்தப்படுத்தினர். இந்த வாட்ஸ் அப் குழுவின் இந்த செயலை அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜகான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment