தேவர்சோலை தேவன் எஸ்டேட் கிராம பகுதிக்கு சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 5 November 2022

தேவர்சோலை தேவன் எஸ்டேட் கிராம பகுதிக்கு சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை  தேவன் எஸ்டேட்  கிராம பகுதிக்கு சரியான முறையில் சாலை வசதி இன்றி உள்ளதால் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் அப்பகுதி மக்கள் அவதி.


தேவர்சோலை  அடுத்துள்ள தேவன் எஸ்டேட் இங்கு 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இன்னிலையில் இப்பகுதி மக்கள்  இந்த சாலையைதான் பயன் படுத்தி வருகின்றனர் தற்போது பெய்த கனமழையில் தார் சாலை மண் சாலையாக மாறி குண்டும் குழியுமாக மாறி விட்டது.


இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அவசரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் ஆட்டோவை வரவழைத்து செல்ல வேண்டிய நிலை பிரசவம் மற்றும் வயிற்று வலி என்றால் அவதிபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


மேலும் இந்த சூழலில் அரசு பேருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தாலும் தான் வரும் என்கின்றனர் அப்பகுதி மக்கள், இப்பகுதியில் பல ஆண்டுகளாக  அரசுப் பேருந்தும் தனியார் வாகனங்களும் சென்றுவரும் சாலையை சீர் செய்யாமல் உள்ளது  பகல் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும்  மாணவ மாணவிகளும் கூடலூர் தேவர்சோலை போன்ற பகுதிகளுக்கு வேலை விஷயமாக  செல்பவர்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய முடியவில்லை.


ஆகையால் இப்பகுதியில் சாலைகளை டெண்டர் விடப்பட்டும்  சாலைகளில் சீர்செய்யாமல்  தாமதப்படுத்தப்பட்டு வருகிறது   உடனடியாக மக்களின் நலன் கருதி இச்சாலையை உடனடியாக  சீரமைக்குமாறும் விடுதலைச் சிறுத்தைகள்  கட்சி தேவர்சோலை பேரூர் செயலரும் சமூக ஆர்வலருமான சிவசங்கர் அவர்கள்   பேரூராட்சி நிர்வாகத்திடம் வார்டு உறுப்பினரகள்  அப்பகுதி பொது மக்கள்ஒன்றினைந்து மனு கொடுத்தனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜகான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு. 

No comments:

Post a Comment

Post Top Ad