கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை மே ப்பீல்டு பகுதியில் 40 வருட பழமை வாய்ந்த தரைப்பாலம் சீரமைக்காமல் கிடப்பிலேயே போடப்பட்டது. இந்த மேப்பீல்டு பகுதியில் சுமார் முப்பது குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியின்வழியாக கொத்தாடு நெல்லிக்குன்னு பகுதியில் உள்ள ஆதிவாசி வீடுகளுக்கு செல்லக்கூடிய முக்கிய வழியாக இந்த வழியை தான் பள்ளி மாணவ மாணவியர் பயன் படுத்துகின்றனர் .
இந்த பகுதி மக்கள் தேவர் சோலைக்கு வர வேண்டுமென்றால் அரை மணிநேரம் சுற்றி நடந்து தான் வர வேண்டும் . இந்த தரை பாலத்தை சீர் செய்தால் பத்து நிமிடத்தில் தேவர் சோலைக்கு போய் விடலாம் என்கின்றனர். அதுமட்டுமல்ல மேப்பீல்டு பகுதியில் இந்த பாலம் இதற்கு முன் மூங்கிலால் அமைக்கப்பட்டிருந்த போது மேப்பீல்டு சூப்ரவைசர் மகள் தேவர்சோலைக்கு நடந்து வந்த போது மூங்கில் பாலத்தில் கால் மாட்டி எலும்பு முறிவு ஏற்பட்டது.

அதன் பின் இந்த பாலத்தை இரும்பு பட்டையில் அமைக்கப்பட்டது அந்த பாலமும் சரியாக பயன் படுத்த முடியலை காரணம் அந்த இரும்பு பாலத்தின் மேல் பகுதி கூர்மையாக முக்கோன வடிவத்தில் இருப்பதால் கால்கலில் அழுந்தம் ஏற்படுகிறது. அவசர காலங்களில் வந்து போக சிரமமாக இருப்பதால், இந்த பாழத்தை வெகு விரைவில் சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் தன்னார்வலர் நிஷா போன்றோர் கேட்டுக்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா கான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.....


No comments:
Post a Comment