சுல்தான் பத்தேரியில் செட்டி சமுதாயத்தின் பேரணி. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 16 November 2022

சுல்தான் பத்தேரியில் செட்டி சமுதாயத்தின் பேரணி.


சுல்தான் பத்தேரியில் செட்டி சமுதாயத்தின் பேரணி நடைபெற்றது, ஐம்பது வருட பழைமையயான வினாயகர் கோவில் நிகழ்ச்சியில் வயநாடன் செட்டி சேவை சங்கம் சமுதாயத்தின் தலைவர் வாசு. தமிழ்நாடு பகுதி தலைவர் ஸ்ரீதரன், வேலாயுதன், தோட்டமூலா, கேரளா பிரிவு செயலாளர் KK தாமோதிரன், விழா கண்வீனர் இரா விந்திரன், படிப்புரா, மணல் வயல் M வேணுகோபாலன், தமிழ்நாடு செயலாளர் பத்மநாபன் மாஸ்டர், கேரளா பிரிவு செயலாளர் பாலகிருஷ்ணன், பொருலாளர் கே.கே வாசு மற்றும் செட்டி சமுதாயத்தினர் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

சுல்தான் பத்தேரியில் உள்ள வினாயகர் கோவிலின் ஐம்பதாவது வருடாந்திர திருவிழா நடைபெற்றது, இந்த விழாவின் துவக்கமாக ஐயன் கோவிலில் இருந்து புறப்பட்டு பத்தேரி மெயின் பஜார் வழியாக கோவிலை வந்தடைந்தது, அதன் பின் பக்ததர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வயநாடன் செட்டியினரின் நடனம் கோலாட்டம் கும்மியாட்டம் போன்ற காலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது . 

இந்த கோவிலின் சிறப்பு அம்சம் என்றால் தாராபுரம் பகுதி பூர்விகமாகக் கொண்ட செட்டி சமுகத்தினர் ஒன்றினைந்து வாழ்ந்து வந்தனர்.  இன்னிலையில் தமிழ் நாடு, கேரளா மாநிலம் பிரிக்கும்  முன்பதாக  ஒன்றாக வாழ்ந்து வந்தனர். தற்போது தமிழ் நாட்டில் 25ஆயிரம் பேரும், கேரளாவிலும் ஒரு லட்சம் பேரும் இருக்கின்றனர்.


இந்நிலையில் தழிழ் நாடு கேரளா  பிரிப்பதற்கு முன் தங்கள் சொந்த நிலத்தில் பயிர் செய்யப்பட்ட தானிய வகைகள் பழங்கள், காய்கறிகள் முதல் அறுபடையை  கடவுளுக்கு படைத்து  அந்த காய்கறிகளை கொண்டு  சமைத்து அன்னதானம் செய்வார்கள், இப்படி செய்வதின் மூலமாக தங்கள் பயிர் வளங்கள் செழிக்கும், வாழ்க்கை உயரும் என்ற நம்பிக்கையாக இருக்கிறது.

  

அது மட்டுமல்ல இந்த  திருவிழாவின் போது பிரிந்து வாழ்ந்து வந்த தங்கள் சமுதாயித்தினர், இந்த கோவில் திருவிழாவில் ஒன்று சேர்வார்கள் அப்படி சேரும் போது  தங்கள் குடும்பத்திலுள்ள மகனுக்கோ அல்லது மகளுக்கோ  வரன்கள் பார்ப்பர், இப்படி வரன்கள் பார்த்து ஒருவர் குடும்பத்திலிருந்து மற்றோரு குடும்பத்திற்கு பெண்னோ, மாப்பிள்ளையோ தேர்வு செய்து திருமணம் நிச்சயிக்கப்படும்.


இதுபோன்ற நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி 30 தேதி பத்தேரியில் உள்ள வினாயகர் கோவிலில் திருவிழா மிக சிறப்பாகக்கொண்டாடப்படும், இதில் செட்டி சமுதாய மக்கள், கேரளாவின் வயநாடு போன்ற பகுதியிலிருந்து மூன்றாயிரத்துக்கு மேற்பட்டோர் இன்றைய பேரனியில் கலந்துக்கொண்டு திருவிழாவை மிக சிறப்பாக கொண்டாடினார்கள், இந்த கோவிலில் ஏழு நாட்கள் சிறப்பு பூஜை செய்வதோடு தினமும் அன்னதானமம் நடைபெறும்  இந்த பூஜையில் பல்வேறு தரப்பு மக்களும் தங்கள் வழிபாட்டை நடத்துவார்கள்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜகான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....

No comments:

Post a Comment

Post Top Ad