கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவாலாவியில் பகுதியில் யானை தாக்கி பாப்பாத்தி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 21 November 2022

கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவாலாவியில் பகுதியில் யானை தாக்கி பாப்பாத்தி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும் இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கூடலூர் பகுதியில் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் யானைகள் குடியிருப்புகளை சேதப்படுத்துவதும், விலை நிலங்களை சேதப்படுத்தியும் வருகின்றன. மேலும் மனிதர்களை தாக்கியும் வருவதால் மனித உயிர்கள் பலியாகி வருவது தொடர் கதையாகவே உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவாலா வாளவயல் பகுதியில் பாப்பாத்தி என்பவரின் வீட்டை யானை உடைத்து சேதப்படுத்தியது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று பேர் இடிப்பாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர். இதில் பாப்பாத்தி (வயது 50) என்பவரை யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 


சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர்  யானையை அங்கிருந்து விரட்டினர். இதனை அடுத்து காயம் அடைந்த இருவரை கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


மேலும் யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பாப்பாத்தியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூடலூர் பகுதியில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கூடலூர் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் யானைகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா காந்த் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.... 

No comments:

Post a Comment

Post Top Ad