நீலகிரி மாவட்டம் அருவங்காடு அருகில் உள்ள உபதலை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் அவர்கள் பெங்களூர் ராஷ்ட்ரிய ராணுவ பள்ளியில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார் தந்தையின் நடத்தைகளில் ஈர்க்கப்பட்ட பவித்ரா தானும் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டார். இளங்களை வணிகவியல் பயின்று ராணுவத்திற்கான செலக்சன் தேர்வில் வெற்றி பெற்று சென்னை மறைமலை நகரில் 9 மாதம் பயிற்சியை முடித்தார் சிறப்பாக கற்றுக்கொண்டதை பாராட்டி வாள் மற்றும் வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது.
சத்தியப்பிரமாணம் நிகழ்சியில் கலந்து கொண்டபின் சொந்த ஊருக்கு வந்த பவித்ரா அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது, ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்ற போகும் இவர் படுக சமுதாயத்தில் முதல் லெப்டினன்ட் ஆவார் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு தமது செயல்பாடு இருக்கும் என கூறினார்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி நகர செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.


No comments:
Post a Comment