படகு இல்லம் செல்லும் வழியில் உள்ள சாலையில் குழி உள்ளதா அல்லது குழியில் சாலை உள்ளதா என வினவும் பொதுமக்கள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 6 November 2022

படகு இல்லம் செல்லும் வழியில் உள்ள சாலையில் குழி உள்ளதா அல்லது குழியில் சாலை உள்ளதா என வினவும் பொதுமக்கள்.

நீலகிரி மாவட்டம் உதகை நகரின் முக்கிய சாலைகளில் ஒன்று உதகை படகுஇல்லம் செல்லும் சாலையாகும் இந்த சாலையில் நாள்தோறும் ஆயிர கணக்கான உள்ளூர் வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் ஆயிர கணக்கான வாகனங்களும் வந்து செல்கின்றன இந்நிலையில் உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து படகு இல்லம் செல்லும் சாலையின் உடைய நுழைவுப் பகுதியிலேயே சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.


இரு சக்கர வாகனங்களில் வருவோர் எதிரே வாகனங்கள் வந்தால் தத்தளித்த தண்ணீரில் விழும் நிலை தான் இங்கு காணப்படுகிறது, உதகையின் முக்கிய சாலையை இப்படி என்றால் மற்ற சாலைகளின் தரம் எப்படி என்று முகம் சுளிக்க வைக்கிறது சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் விபத்துக்கள் ஏற்படும் முன்னர் இதற்கான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நன்மை தரும் என்றும் அனைவருமே கருதுகின்றனர்


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு... 

No comments:

Post a Comment

Post Top Ad