தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழப்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 November 2022

தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழப்பு.

கூடலூர் அருகே உள்ள  ஒவேலி பேரூராட்சிக்கு உற்பட்ட  பாரதிநகர் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில்  சிறுத்தை ஒன்று  மர்மமான முறையில் உயிரிழப்பு.

கூடலூர் அருகே உள்ள ஒவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட  ஒரு தனியார் தேயிலை  தோட்டத்தில்  சிறுத்தை ஒன்று  மர்மமாக உயிரிழந்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் ஒவேலி வன சரகத்திற்கு  உட்பட்டது பாரதிநகர் கிராமத்தில் மாரியம்மன் கோயிலை  ஒட்டியுள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்த கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல்  கொடுத்தனர். அதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று இறந்த சிறுத்தையின் உடலை வனதுறையினர்  கைப்பற்றினர். 


இறந்தது ஆண் சிறுத்தை என்றும் அந்த சிறுத்தைக்கு 6முதல் 7 வயது இருக்கும். என  கால்நடை  மருத்துவர்கள் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர்கள் மூலம்  இறந்த சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னரே சிறுத்தையின் மரணம் குறித்து தெரியவரும்'' என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் மர்மமான முறையில் இவ்வளவு பெரிய சிறுத்தை இறந்து கிடப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad