சிறப்பு விருந்தினர் ஊராட்சி மன்ற உறுப்பினர் விமலா கலந்துக்கொண்டார் சிரையாஸ் சமுக சேவை நல சங்கம் செயலாளர் அருள்மேரி மற்றும் குழந்தைகள் பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவமாணவியர் தங்ஙள் திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக பேச்சு போட்டி நடத்தி பரிசுகளை வழங்கினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டது. இதே போல் பள்ளியின் சார்பாக மாணவர்களுக்கு காலை சிற்றுன்டி வழங்கும் உணவுகளை சமைத்து அதை காட்சிப்படுத்தப்பட்டது பின்பு வந்தவர்களை வைக்கப்பட்ட உணவுகளை சுவைத்து பார்க்க வைத் தார் இந்த உணவை உண்டு சுவையாகவும் தரமாக உள்ளது என க்கூறினர்.
ஐந்தாம் வகுப்பு மாணவன் தினேஸ் காலையில் தங்களுக்கு வழங்கும் உணவுகளைப்பற்றியும் அதன் பயனைப்பற்றியும் கூறினார், இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஞானசௌந்திரி தலைமை ஆசிரியர் கூறுகையில் தளபதியாரின் சிறப்பு திட்டமான காலை சிற்றுன்டி வழங்கும் திட்டம் பயனாக உள்ளது இந்த மாணவர் அதிகளவு மாணவர்கள் தங்கள் வீடுகளில் சரியாக சாப்பிடுவதில்லை இதனால் அவர்கள் காலையில் சாப்பிடாமலும் வந்து விடுகின்றனர்.
இதனால் சரியான ஊட்டசத்து கிடைக்காது இங்கு வந்து அதிகமான மாணவர்கள் சாப்பிடுகின்றனர் அதே போல் பள்ளி மாணவர்கள் பாடம் கற்க இங்கு வருகின்றனர் இதனால் மாணவமாணவியர் என்னிக்கை கூடுகின்றது என கூறினார். இந்த காலை உணவு வழங்கும் திட்டத்தை இன்னும் கிடைக்காதசில பள்ளிகளுக்கு அரசு அனுமதி தந்தால் நன்றாக இருக்கும் என கூறினார்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜகான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment