தேவர்சோலை பேரூராட்சி இரண்டாம் வார்ட் பகுதியில் வனப்பகுதியில் இருந்து நீரூற்றாக வரும் நீரை நீர் தொட்டியாக கட்டி தேவன் எஸ்டேட் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் ஆக இருந்து வருகிறது. இக்குடிநீர்த்தொட்டி வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ளதால் யானை மற்றும் வனவிலங்குகள் தொட்டியிலிருந்து நீரை பருகி செல்வதுடன் குடிநீர் தொட்டியும் யானையால் சேதப்படுத்தப்பட்டது.

இதன்காரணமாக இப்பகுதி மக்கள் பருகி வரும் குடிநீர் மாசடைந்து வருவதை அறிந்த இப்பகுதி மக்கள் இரண்டாம் வார்ட் உறுப்பினர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர் . இதைத்தொடர்ந்து வார்டு உறுப்பினர் பேரூர் மன்ற கூட்டத்தொடரில் இது சம்பந்தமா அறிவித்ததைத்தொடர்ந்து இக் குடிநீர் பற்றி தூர்வாரி சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் புதிய குடிநீர்த் தொட்டி கட்டுவதும் அதற்கொரு மேற்கூரை அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்து முதற்கட்டப்பணியாக தொட்டி அமைப்பதற்கான அளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....


No comments:
Post a Comment