
கூடலூர் பகுதியில் சாலை ஓரம் நிறுத்தப்படக்கூடிய அனைத்து வாகனங்களும் ஒழுங்கு செய்து சீர் செய்து செல்லக்கூடிய வாகனங்களுக்கு இடம் பெற்று தந்தால் வந்து செல்லக்கூடிய வாகனத்தை ஏதுவாக இயக்க கூடலூர் போக்குவரத்து டிராபிக் போலீஸ் தனது பணிகளை சரியாக கவனிக்கப்படாத காரணத்தினால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என பொது மக்கள் வாகன ஓட்டிகள் கூறினர்.
இந்நிலையில் நேற்றைய தினம் மாலை 4 மணி அளவில் கூடலூரில் உள்ள டாப் பாக்ஸ் எதிரே நேற்று ஒரு வேன் நிறுத்தப்பட்டது நிறுத்திய ஒரு நிமிடத்திற்குள் அந்த வாகனத்திற்கு பின்னே வந்த லாரி kA.o1.AH.0730. என்கின்ற லாரி மரங்களை ஏற்றி வந்த பொழுது எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட டெம்போ இடித்ததன் காரணமாக டெம்போ 1 சற்று இழுத்துச் சென்று எதிரே நின்றுத்தி வைத்திருந்த ஆட்டோவின் மோதியதால் ஆட்டோவின் பின்பக்கம் நெளிந்ததுடன் வேனின் மேற்குறையும் சற்று உழைத்த நிலையில் காணப்பட்டது.
இதனால் கூடலூர் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மக்கள் சிரமத்துக்குளானார்கள் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு ட்ராபிக் போலீஸ் அவர்கள் கூடலூர் சாலை ஓரம் இருக்கக்கூடிய வாகனங்கள் அந்த இடத்தில் இருந்து மாற்றி வேறு இடத்துக்கு அனுப்ப ஆணையிட வேண்டும் காலையில் நிருத்தி விட்டு மாலை நேரம் தான் வாகனத்தை எடுக்கின்றனர் அதிலும் வேலை இல்லாமல் ஊர் சுற்றி திரிபவர்கள் தான் அதிக அளவு நபர்கள் சாலையின் ஓரமாக நிருத்தி விட்டு செல்கின்றனர் அதுவு சியான முறையில் நிருத்தாமல் குறுக்கு நெடுக்காக சாலையில் இடையே நிறுத்துகிறார்கள் இதை சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பழக் கடைகாரர்கள் கேட்டுக்கொண்டனர் கொண்டனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு.
No comments:
Post a Comment