நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணி பொன்னூர் பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகள் உலா வருகின்றனர் இரவு நேரங்களில் குடியிறுப்பு பகுதிக்கு சென்று மக்களை அச்சுறுத்துவதோடு விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை பாக்கு மரவள்ளிகிழங்கு இஞ்சி போன்ற பயிர்களை நாசம் செய்து வருகின்றது. இன்னிலையில் யானை கண்கானிப்பு குழு இரவு முழுவது யானை கூட்டத்தை அடர்ந்த பகுதிக்கு விரட்டி விட்டாலும் மறுபடியும் ஊருக்குள் வந்து விடுகிறது இதனால் வனத்துறையினர் தினறி வருகின்றனர்.
இன்னிலையில் அரசு தோட்டக்கலை பண்ணையில் நேற்றிரவு மூன்று காட்டு யானைகள் 4000 நாற்றுக்களை அங்குள்ள பாக்கு .பட்டர் ஃப்ரூட் நாற்றுக்களை அரிய வகை மர கன்றுகள் போன்றவை சேதப்படுத்தியது. இந்தப் பண்ணையில் ஒரு வாரத்துக்கு முன்பு இந்த காட்டு யானைகள் கூட்டம் 12,000 நாற்றுக்களை மிதித்து சேதப்படுத்தின. மேலும் தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பணிபுரிய ஊழியர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதனால் வனத்துறையினர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என அப்பகுதி யில் பணிபுரியும் ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு....
No comments:
Post a Comment