நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி பகுதியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மூலம் ஆர்ப்பாட்டம் நடத்தினர், இந்த ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- அங்கன்வாடி மையங்களில் சமைக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முழு தொகையும் வழங்கிட வேண்டும்.
- புதிய கைபேசிகள் வழங்கிட வேண்டும்.
- 3.அரசு நியமிக்கப்பட்ட பள்ளிகளை தவிர மற்ற அரசு பள்ளிகளில் உள்ள எல்கேஜி யுகேஜி வகுப்புகளை தடை செய்ய வேண்டும்.
- 10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களை ஒருங்கிணைப்பது தவிர்க்க வேண்டும்.
- காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
- அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
- செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாட அங்கன்வாடி பணியாளர்களால் செய்யப்பட்ட செலவு செய்யப்பட்ட தொகையை அரசு வழங்கிட வேண்டும்.
எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment