கூடலூர் பகுதியில் மக்களை பிளவுபடுத்தும் சனாதன கும்பலுக்கு எதிராய் சமுக நல்லினக்க வலியுறுத்தி மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் சகாதேவன், கம்னியூஸ்ட் கட்சியின் தமிழ் நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் வாசு போன்றோர் தலைமை தாங்கினார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துனைதலைவர் அம்சா. நகர தலைவர் ஷாபி கூடலூர் நகர மன்ற தலைவர் சிவராஜ் முஸ்லிம் லீக் அனிபா .நாசர் கனி .மற்றும் காங்கிரஸ் சி.பி.ஐ. விடுதலை சிறுத்தை . ஐயு எம்எஸ். எம்.எம்.கே. நாம் தமிழர் கட்சி போன்ற அனைத்து கட்சியின் தலைவர் மற்றும் பொருப்பாளர் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.
அண்மைகாலமாக தமிழகத்தில் ஒன்றுமையாக இருக்கும் மக்களின் மதவாதத்தை பிஜேபி கட்சிகள் தூன்டி மத ஒற்றுமையை சீர்குலைந்து வருகிறது . தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து வன்முறைகளை தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தலைமையிலான சங்கபரிவார் அமைப்புகள் திட்டமிட்டு முயற்சி மேற் கொண்டு வருகிறது தற்போது கோவையை மையப்படுத்தி இந்த முயற்சிகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்னிலையில் சில இடங்களில் சில நாட்களாக ஆங்காங்கே பெட்ரோல் குன்டு வீச்சுகளும் நடை பெருகின்றன. இவற்றிற்கு காரணமானவர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் நச்சு அரசியலுக்கு இடமளிக்க வேண்டாமென தமிழக மக்களை கேட்டுக்கொண்டுள்ளார் மேலும் தமிழகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மதரீதியில் மக்களை பிளவுபடுத்தும் சங்கபரிவாரர்களின் முயற்சிகளை புறக்கனிப்பதோடு அவற்றை முறியடிக்க அனைவரும் முன் வர வேண்டும். மக்கள் ஒற்றைமை மதச்சார்பின்மை மத நல்லிணக்கம் சமூக அமைதி மாநில வளர்ச்சி ஆகியவற்றை காப்பாற்றும் முயற்சியின் ஒரு பகுதியை வெளிபடுத்த இன்றைய தினம் கூடலூர் பகுதியில் மக்களை பிளவுபடுத்தும் சனாதன கும்பலுக்கு எதிராய் சமுக நல்லினக்க வலியுறுத்தி மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வியாபாரிகள் தங்கள் கடையடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment