ஊட்டி அரசு கலை கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்களாக 93 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஊட்டி அரசு கலைக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்திற்கு பால்ராஜ் தலைமை தாங்கினார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பாதங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினார்.
இதைக் குறித்து அவர்கள் கூறும்போது, அரசாணை எண் 56-ஐ பின்பற்றி கவுரவ விரிவுரையாளர் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சட்டக் கல்லூரிகளில் வழங்குவது போல் ரூபாய் 30 ஆயிரமாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மாநில தகுதி தேர்வு உடனடியாக நடத்த வேண்டும். கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் பணி அனுபவம் நேர்காணல் முறையை பின்பற்றி எழுத்து தேர்வை கைவிட வேண்டும் என்றனர். இன்று செவ்வாய்க்கிழமை கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடைபெறுகிறது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குந்தா தாலுக்கா செய்தியாளர் சிவா பழனி மற்றும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment