கூடலூர் நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 31 October 2022

கூடலூர் நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு கூடலூர்  நகராட்சி மன்ற தலைவர் பரிமளா தலைமை தாங்கினார் இந்த கூட்டத்தில்  நகராட்சியின்  ஆனையாளர்பிரான்சீஸ்  நகராட்சியின் பொறியாளர் ஆல்துரை துனை தலைவர் சிவராஜ் .மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலரும்  கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்து காரசாரமான விவாதங்கள் ஏற்பட்டது இந்த கூட்டத்தில் இருக்கக்கூடிய தெரு விளக்கு பிரச்சினைகள் குடிநீர் பிரச்சினை சாலை வசதிகள் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த சில பகுதி  கட்டுமான சேதங்களை பற்றி விவாதமாக பேசப்பட்டது.


கூட்டத்தில் 17.ஆம் ஆண்டு கவுன்சிலர் வெண்ணிலா சேகர் பேசுவையில் நகராட்சியின் பணங்களை நகராட்சி அலுவலர்கள் மோட்டார் பழுது பார்ப்பது குடிநீர் தண்ணீர் வடிகட்டுதல் இந்த குடி தண்ணீரை வடிகட்டுவதற்கு மணல் கூட்டுதல் இந்த  வீன் செலவில் கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபாய் இந்த மோட்டார் இயந்திரத்துக்கு மின்சார வாரியத்திற்கு  மக்களின் வரி பணத்தை  வீன் விரையம் செலுத்தி வருகின்றனர்.


அது மட்டும்மல்ல வருசத்திற்கு  38 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது மக்கள் பணத்தை வீண் விரயம் செய்து வருகின்றனர் என்றும் சில பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகள் காட்டு யானைகள் உடைத்து விடுவதால் அது முற்றிலும் சேதம் அடைகிறது  இந்த தண்ணி தொட்டியை சீர்  செய்தாலே எல்லா பகுதி மக்களுக்கும் தண்ணீர் தங்கு தடை இன்றி விநியோகம் செய்யப்படலாம் என அவர் கூறினார்.


மேலும் இந்த நகராட்சி நஷ்டத்தில் இயங்காமல் லாபத்தில் இயக்கலாம் இருக்கக்கூடிய பணத்தை மிச்சம் செய்து நகராட்சியை மேன்மேலும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லலாம் என்றும் அவர் தன் கருத்தை எடுத்துரைத்தார். இதேபோன்று கூடலூர் பகுதியில் இருக்கக்கூடிய பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியரும் அரசு மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளும் அப்பகுதியில் இருக்கக்கூடிய பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர் அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் மழைக்காலங்களில் இந்த அரசு பேருந்து நிறுத்தம் முற்றிலும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மாணவர்கள் மழை காலத்தில்  அங்கே ஒதுங்க முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர்.


இதனை சீர் செய்து தர வேண்டும் என ஆறு மாத காலமாக எடுத்துக் கூறியும் மன்றம் செவி சாய்க்கவில்லை என்றும் தன் கருத்தை பதிவு செய்தார் அது மட்டுமல்ல அது 17 ஆம் ஆண்டு பகுதியில் கெமிப்பாறை சுற்றுவட்டார பகுதியில் 15 பல்புகள் சேதமாகி உள்ளன இதற்கு செல்லக்கூடிய மின் இணைப்புகளும் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது இதனை செய்து கொடுத்தால் அப்பொழுது மக்கள் யானை தாக்குதல் இருந்து தப்பிக்க முடியும் எனவும் தன் கருத்தை மேலும் எடுத்துரைத்தார்.


இதனை நகர மன்றம் வெகு விரைவில் செய்து தருவதாகவும் கூறியது, கூட்டத்தில்  நகர மன்றத்தில் கூடலூர் பல்வேறு பகுதிகளில் நல்ல முறையில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு கடந்த மாதக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக செய்திருப்பதாக 21 ஆம் ஆண்டு கவுன்சிலர் செய்யது அனுப்ஹான் பாராட்டி பேசி னார்  இந்த கூட்டத்தில் 21வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்தினை எடுத்து கூறினார்கள்  கருத்துக்களை நகர மன்ற தலைவர்  ஏற்று நீர் மானத்தில் இயற்றப்பட்டது .


இறுதியாக நகராட்சியின் மன்ற துனை தலைவர் சிவராஜ் நன்றி கூறினார் கூட்டம் இனிதே நிறையுற்றது


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு.... 

No comments:

Post a Comment

Post Top Ad