கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்களின் உடைமைகளை போலீசார் சோதனை மேற்கொண்டனர் இதை அடுத்து ஊட்டி அருகே கேத்தி கிராமத்தை சேர்ந்த பொதுமக்காள் சிலர் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தருணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் தங்களது வீடு அருகே ஒருவர் வீடு கட்டுவதாகவும் மேலும் சூரிய ஒளி படாமல் இருக்க சில மாற்றங்கள் செய்து தொந்தரவு செய்வதாகவும் இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர்.
ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கையை தெரிவித்தனர் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் திரு ச.ப. அம்ரித் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அலுவலகங்களுக்கு உத்தரவிட்டார்.

பொதுமக்களிடமிருந்து 110 மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சுயதொழில் தொடங்க இரண்டு பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரத்துகாண காசோலை சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் தேவபெட்டா அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வசந்தாமணி உடல்நல குறைவால் இறந்ததை தொடர்ந்து அவரது வாரிசான ரம்யாவுக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் ஆணை ரத்ததானம் முகாம்கள் சிறப்பாக நடத்தி கொடுத்து 16 வருடங்களுக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட கலெக்டர் திரு ச.ப. அம்ரித் வழங்கினார். இதில் மாவட்ட அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment