நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழா தமிழ்நாடு அரசு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் நீலகிரி மாவட்டம் சார்பாக நடைப்பெற்றது.
இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் பொருட்டு தொழில் திறன் பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு திறன் பயிற்சி முகாம் குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்து சிறப்புரையாற்றினார்.
மேலும் தனியார் நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கினார். தொடர்ந்து உயர்திரு மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி ப்ரியதர்ஷினி அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள இளைஞர் திறன் வேலைவாய்ப்பு பயிற்சி குறித்து முன்னிலை உரையாற்றினார்.
மேலும் ஜாகிர் உசேன் திட்ட இயக்குநர் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்ககம், நீலகிரி மாவட்டம் வரவேற்புரை வழங்கினார், இறுதியாக கல்லூரி முதல்வர் முனைவர் ரா.ராஜேந்திரன் நன்றியுரை வழங்கினார்.
கூடலூர் வட்டார இளைஞர்கள் இளைஞர் திறன் பயிற்சி முகாமில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட மாணவர் செய்திருந்தனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா காந்த் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு.
No comments:
Post a Comment