இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை பயண பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஒற்றுமைக்காக பாதயாத்திரை கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பாதயாத்திரை நடத்தி முடித்து விட்டு. தொடர்ந்து நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு வருகிறார். பின்னர் ஆமைகுளம் என்ற இடத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார்.
தொடர்ந்து கோழிப்பாலம், பள்ளிப்பாடி, நந்தட்டி, செம்பாலா வழியாக கூடலூர் நகருக்குள் ராகுல் காந்தி செல்கிறார். பின்னர் புதிய பஸ் நிலையம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.. இவரை வரவேற்கும் முகமாக நாடுகானி பகுதியிலிருந்து கூடலூர் வரை பிரம்மாண்ட வளைவுகள் கட்டவுட்டுகள் கட்சி கொடிகள் சாலை நெடுகிலும் அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு...
No comments:
Post a Comment