நீலகிரி மாவட்டம் உதகை முத்தோரை பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் வயது 33 கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்கள் உதகை ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்றைய முந்தினம் முத்தோரை பாலடா பகுதியில் உள்ள கிணற்றில் ஒரு வாலிபன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாயமான காளியப்பன் என்பது தெரியவந்தது, இதனை தொடர்ந்து அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து உடலை கிணற்றில் வீசி விட்டு சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக குந்தா தாலுக்கா செய்தியாளர் சிவா மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment