எருமாடு குனில் பகுதியில் புலி இரு ஆடுகளை கொன்றதாக தகவல் கிடைத்ததால் அப்பகுதி மக்கள் அச்சம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 September 2022

எருமாடு குனில் பகுதியில் புலி இரு ஆடுகளை கொன்றதாக தகவல் கிடைத்ததால் அப்பகுதி மக்கள் அச்சம்.

பந்தலூரை அடுத்துள்ள எருமாடு குனில் பகுதியில் வசித்து வருபவர் கலத்தில் ‌‌ஶ்ரீதரன் என்பவர் தன் தோட்டத்தில் ஆடுகளை வளர்ந்து வந்தார். இன்னிலையில் 23ஆம் திகதி ஒரு  ஆட்டை கடித்து குதறிய  நிலையில் தோட்டத்தில் கண்டெடுத்து அதை புதைத்தனர். நேற்றைய தினம் 24-9-22 ஶ்ரீதரன் வழக்கம் போல் தோட்டத்தில் உள்ள ஆட்டுபட்டியில்  ஆடுகளுக்கு இறைபோட போன போது ஆடு கடித்து குதறிய நிலையில் கட்டப்பட்டிருந்த ஆடு பட்டியின் மறுபக்கம் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது இதை பார்த்த ஆட்டின் உரிமையாளர் ஶ்ரீதரன் மனம் உடைந்து போனார் அரிய வகை ஆடான யமுனபாரி என்று சொல்லக் கூடிய இந்த இரண்டு ஆடுகளும்  செந்து போனது மன வேதனையை அளித்துள்ளது.


இறந்து போன இரண்டு ஆடுகளின் மதிப்பு 15ஆயிரம் என்று தெரிவித்தார். இன்னிலையில் ஆட்டின் உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார் சம்பவத்தை அரிந்த வனத்துறை அலுவலர்கள் வனபாதுகாலவர்கள் மற்றும் கால்நடை மருத்துவர் சரன்யா  சேரங்கோடு பஞ்சாயத்து துனை தலைவர் சந்திரபோஸ் நீலகிரி மாவட்ட  ஊராட்சி மன்ற உறுப்பினர் அனிஃபா மாஸ்டர் நேரில் சென்று பார்த்னர் . பின்பு  வனத்துறையினர் தோட்டத்தில் சுற்றி மூன்று இடங்களில்   கேமிரா வைத்து கண்கானிக்கப் போவதாக கூறினர். இன்னிலையில் சந்திர போஸ் வனத்துறையினரை பார்த்து ஐயா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பொது மக்கள் புலியை பார்த்து விட்டு என்னிடம் சொன்னது உங்களிடம் நினைவு கூர்ந்தேன் கண்டு நீங்கள்  கொள்ளவில்லை மீண்டு இப்படி பட்ட சம்பவம் நடந்துள்ளது  என்றார்.


இது புலி அடித்தா  அல்லது சிறுத்தையா என்பது நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்றார் எங்களுக்கு சந்தேகம் இது புலின் தாக்குதல் தான் என கருத்துகிறேன் என்றார். இன்னிலையில் ஆட்டை இழந்த இவருக்கு நஸ்ட ஈடு தர வேண்டும் இது எந்த மிருகம் தாக்கியது கண்டு பிடித்து கூட்டு வைக்க வேண்டும் வனத்துறையினர் இந்த பகுதிக்கு கண்காணிக்க ஆட்களை அமர்ந்ப்பட வேண்டும் இப்பகுதி மக்களுக்கு பாது காப்பு தர வேண்டும் என  ஊராட்சி மன்ற துனை தலைவர்.மற்றும் அனிஃப்பா மாஸ்டர் போன்றோர்  கூறினார்.

மேலும் இந்த குனில் பகுதியில் அதிக விவசாய நிலம் இருந்தும்  இது வரை  காட்டு மிருகங்கள் இங்கு வந்ததில்லை இதுவே முதல் தடவை நடந்த சம்பவம் என்பது குறிப்பிட தக்கது. இச்சம்பவத்தை அறிந்த அக்கம் பக்க உள்ள பொது மக்கள் வந்து பார்த்துச் சென்றனர். இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் பயத்தில் ஆழ்ந்து போய் உள்ளனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை நகர செய்தியாளர் கார்முகில் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.... 

No comments:

Post a Comment

Post Top Ad