கூடலூர் நுகர்வோர் மனிதவள பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஹியாத்துல் இமாம் மஹால் கமிட்டி எருமாடு, ஓய்ஸ் மென் கிளப் குன்னூர், ஷாலோம் சாரிடப்பிள் ட்ரஸ்ட் ஆகியன இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் எருமாடு மதரஸா அரங்கில் நடைபெற்றது.
முகாமிற்கு ஹயதுல்லா மஹால் கமிட்டி தலைவர் செய்தலவி தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், துணை தலைவர் ராஜா, ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், ஷாலோம் அறக்கட்டளை நிர்வாகி சுப்பிரமணி, ஓய்ஸ் மென் கிளப் நிர்வாகி தினேஷ் மாத்யாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் ஹனிபா மாஸ்டர், சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவரும் திமுக மாவட்ட பிரதிநிதியுமான சந்திரபோஸ் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர், முகாமில் உதகை மருத்துவ கல்லூரியின் மருத்துவ குழுவினர் கண் நோய்களுக்கும் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள்.
கண் புரை நோயினால் பாதிக்கப்பட்ட வர்கள் 10 பேர் தேர்வு செய்து உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று நவீன லேசர் முறையில் அறுவை சிகிச்சை செய்து தரபடுகிறது, முகாமில 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.
Post Top Ad
Sunday, 25 September 2022
எருமாடு மதரசாவில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - நீலகிரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், நீலகிரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment