நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று உதகை படகு இல்லம். தமிழ்நாடு சுற்றுலா துறையின் கீழ் இயங்கி வரும் படகு இல்லத்துக்கு ஆண்டு தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கன மழையில் படகு இல்லம் ஏரியை சுற்றி இருந்த இரும்பு வேலி ராட்சச மரம் விழுந்து பாதிப்புக்கு உள்ளானது. ஏரியை சுற்றி உள்ள வேலி சரி செய்யப்படாத நிலையில், உதகை படகு இல்லம் செல்லும் சாலையிலிருந்து எரிக்குள் குப்பைகளை கொட்டுவது வாடிக்கையாக இருந்த நிலையில் கடந்த மாதம் 19ஆம் தேதி 'தமிழக குரல்' இணையதள செய்தியில் இது குறித்து செய்தி வெளியானது.
தொடர்ந்து நிர்வாகம் சார்பில் தற்போது "குப்பைகள் கொட்ட வேண்டாம்" என்று எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஏரியை சுற்றி உள்ள தடுப்பு வேலி சீராமைக்கப்பட்டு தற்போது குப்பைகள் கொட்டினால் தண்டிக்கபடுவீர்கள் என்று எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை நகர செய்தியாளர் கார்முகில் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment