கூடலூரில் ராகுல் காந்தி பாதயாத்திரை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 September 2022

கூடலூரில் ராகுல் காந்தி பாதயாத்திரை.

பாரத ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.பாத யாத்திரையை அவர் கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தொடர்ந்து 3 நாட்கள் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் 11-ந் தேதி கேரளாவிற்கு சென்றார்.11-ந் தேதி தொடங்கிய பாதயாத்திரையானது திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்கள் வழியாக 400 கி.மீ தூரத்தை கடந்து உள்ளது. 


தொடர்ந்து மலப்புரம் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தி 29.09.2022 (வியாழக்கிழமை) கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்திற்கு வருகை தந்தார்.


அங்கு அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.



கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட ராகுல்காந்தி கோழிப்பாலத்தில் இருந்து 6 கி.மீ தூரம் பாத யாத்திரையாக கூடலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வருகை தந்தார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களும் பாதயாத்திரையாக வருகை தந்தனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா மற்றும் உதகை நகர செய்தியாளர் கார்முகில் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.... 

No comments:

Post a Comment

Post Top Ad