சேவ் தி பீப்பிள் இணை செயலாளர் ராபர்ட் தலைமை தாங்கினார். கண்ணன் பாட்ட வயல் வரவேற்றார். சேவ் தி பீபிள் தலைவர் டாக்டர். எல்ஜு எல்டோ தாமஸ் துவக்கி வைத்தார். கிஃபா நிர்வாகிகள், சேவ் தி பீப்பிள் பொதுச் செயலாளர் ஷாஜி சளிவயல், ஐ.டி. பிரிவு தலைவர் சுல்ஃபி, பொருளாளர் பிந்துராஜ், தேவர் சோலை பஞ்சாயத்து தலைவர் ஹனிபா வட்டகளரி, மல்லன் மசினகுடி, மோகன், சங்கீதா உள்ளிட்டோர், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் உள்ளிட்ட பல்வேறு நில பிரச்னைகள், சட்டங்கள் குறித்து பேசினர்.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண உச்ச நீதிமன்றத்தை அணுகும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர், ஓவேலி, தேவர்சோலை பஞ்சாயத்து, நெலாக்கோட்டை ஊராட்சி போன்ற இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.
பின்னர் நெலாக்கோட்டை ஊராட்சி தேர்வு நடைபெற்றது. இதில் தலைவராக புருஷோத்தமன் என்ற கண்ணன், பொதுச் செயலாளராக மோகன் மேபீல்டு, பொருளாளராக முகுந்தன், துணைத் தலைவர் எம்.எம். ஜோஸ், இணைச் செயலாளராக சவில்நாத், செயற்குழு உறுப்பினர்களாக தங்கவேலு, கே.டி.உம்மர், அஜி, குரியாகோஸ், ஜெரோம், ஆகியோரும், மகளிர் பிரிவு தலைவராக சங்கீதா, இளைஞர் அணி தலைவராக ரமேஷ், பொதுச் செயலாளராக பிரசாந்த், இணைச் செயலாளராக ரஷீத். சட்டப்பிரிவு தலைவராக பஷீர் உள்ளிட்டோரும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர், கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சையது பக்கானா நன்றி கூறினார்
- தமிழக குரல் செய்திகளுக்காக குந்தா தாலுக்கா செய்தியாளர் சிவா மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment