மத்திய அமைச்சர் ராசாவை கண்டித்து மாவட்டம் முழுவதும் கடையடைப்பு மற்றும் ஒருநாள் பந்த் நடத்த இந்துமுன்னனியினர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், நேற்று காவல்துறை சார்பில் விருப்பம் உள்ளோர் கடைகளை திறக்கலாம் என்றும் யாரையும் கட்டாயபடுத்தகூடாது என்றும் மீறுவோர்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று காலை கூடலூர் அருகே உள்ள பந்தலூர் பஜார் பகுதியில் திறக்கப்பட்ட மளிகை கடைமீது மூவர் தாக்குதல் நடத்தியுள்ளனர் இதனை தொடர்ந்து திமுகவினர் மற்றும் வியாபாரிகள் கடையை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் இரங்கினர்.
இதனை தொடர்ந்து டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் மற்றும் காவல்துறையினர் CCTV. ஆதாரத்துடன் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment