இந்த பரிசளிப்பு விழாவிற்கு நீலகிரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த குந்தா தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு சக்சஸ் சந்திரன் மற்றும் உதகை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு கடநாடு குமார் தெற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் என் பி ராஜு அம்மா பேரவை துணைச் செயலாளர் ஐ என் ரவி எம்ஜிஆர் மன்ற செயலாளர் நஞ்சநாடு முருகன் அம்மா பேரவை தலைவர் கல்லக்கொரை சந்திரன் மற்றும் சுரேந்திர நகர் பகுதியைச் சேர்ந்த நாட்டாமை மணி பெரியார் நகர் பகுதியை சேர்ந்த அண்ணப்பன் அன்னாநகர் பகுதியை சார்ந்த ராஜேந்திரன் சுரேந்தர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு சங்கரன் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டு இந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பித்தனர் அவர்கள் இந்த விழாவில் பேசும்பொழுது எமரால்டு பகுதியில் எம்ஜிஆர் டிராபிக் சுழற் கால்பந்து கோப்பையை வெற்றிகரமாக மக்கள் மனதிலும் கழகத்திலும் விளையாட்டு வீரர்கள் மனதிலும் பதிய வைத்தவர் இன்று நம்மை விட்டு மறைந்த நம்முடைய கழக நிர்வாகி எமரால்டு மணி அவர்கள் அவரைத் தொடர்ந்து இன்றைய தினத்தில் நம்முடைய கழகத்தைச் சார்ந்த சுரேந்திர நகர் பகுதியைச் சேர்ந்த திரு பாபு அவர்கள் இந்த கிரிக்கெட் போட்டிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார் அவர் மென்மேலும் இந்த போட்டிகளை சிறப்பாக நடத்த இந்த நேரத்தில் வாழ்த்துகிறோம் என்று கூறினார்கள் அதனைத் தொடர்ந்து இவ் விளையாட்டுப் போட்டிகளை நடத்திய பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த திரு சுந்தர் மற்றும் சுரேந்திர நகர் பகுதியைச் சேர்ந்த திரு பாபு அவர்கள் கூறும் பொழுது இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் சுற்றுவட்டார பொதுமக்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டார்.
இவ்விளையாட்டுப் போட்டிகளை இதுநாள் வரை பல சிரமங்களுக்கிடையில் நல்ல முறையில் நடத்தி வந்த இந்த அம்மா டிராபிக் குழுவினரை நமது தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவின் சார்பாகவும் மனமார வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம்...
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment