பாஜக ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருவதாகவும், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வினால் அனைத்து தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதா ராகுல் காந்தி பேச்சு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 September 2022

பாஜக ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருவதாகவும், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வினால் அனைத்து தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதா ராகுல் காந்தி பேச்சு.

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருவதாகவும்,  அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வினால் அனைத்து தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதா க கூடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பேச்சு, மாநில அரசுகளின் தேவைகளை புரிந்து மதித்து மத்திய அரசு செயல்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.


ஒற்றுமை பயண  யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி 22வது நாளான  இன்று கேரளா  மாநிலத்திலிருந்து  நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வந்த அவர்  சுமார் 4 கிலோ மீட்டர் தூர நடை பயணம் மேற்கொண்டார்.


இதனைத் தொடர்ந்து கூடலூரில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார், அப்போது பேசிய அவர், பிரிவினைவாதம் மூலம் அமைதியை சீர்குலைக்கும்  பாரதிய ஜனதா கட்சி அரசின்  முயற்சியை தடுக்கவே, தாம் இந்த ஒற்றுமை யாத்திரை பயணத்தை  மேற்கொண்டுள்ளதாக கூறினார்.


மேலும் பேசிய அவர், மத்தியில் ஆட்சி செய்யும் அரசு மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து  மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றார். சரக்கு மற்றும் சேவை வரி நாட்டு மக்களுக்கு எதிரானது என்றும்,  சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் இதனால் நலிவடைந்து வருவதாக அவர் கூறினார். 


பல்வேறு மொழி பேசும் இந்தியாவில்  மத்திய அரசு அனைத்து மாநில மொழிகளையும் ஊக்குவிக்காமல் ஒரு மொழியை மத்திய அரசு திணிக்க முயற்சிப்பதாக அவர் கூறினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை  ஆளுநர்கள் மதித்து செயல்பட வேண்டும் என்றார். 


தற்போதைய  பாஜக ஆட்சியில்  நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருவதாகவும்,  அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வினால் அனைத்து தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதா க கூறினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சரக்கு மற்றும் சேவை வரி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பாமர மக்கள்,  விவசாயிகள் கடும்  பாதிப்பபிற்குள்ளாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad