இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களையும் தீர்த்துக் கொண்டனர், மாணவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது, இதில் விவேகானந்தா இயற்கை வழி அமைப்பின் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விவேகானந்ததா இயற்கை வழி அமைப்பு இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர். இதில் 75 சதவீத மரக்கன்றுகள் அழிவின் விழிம்பில் உள்ளவைகளாகும். இக்குழுவின் மூலம் இதுவரை 40 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மரம் நடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை இக்குழு வழங்குவதோடு பிறந்தநாள், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு இலவச மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிவருகிறது.
தமிழர்களின் கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், காவடி, சலங்கை ஆட்டம் போன்ற கலைகளை இலவசமாக கற்று கொடுப்பதுடன், பாரம்பரிய விவசாய முறைகளை இக்கால இளைஞர்களுக்கு பயிற்றுவித்து வருகின்றனர். இயற்கை விவசாயம், இயற்கை உரம் தயாரித்தல், இயற்கை பூச்சி கொல்லி மருத்துகளை தயாரிக்கும் முறை, மரம் நடுதல், மரங்கள் பற்றி விழிப்புணர்வு, நமது கலைகளை கற்றுக்கொடுப்பது என்று பல்வேறு செயல்களை செய்து வரும் 'விவேகானந்தா இயற்கை வழி அமைப்பினருக்கு ' வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை நகர செய்தியாளர் கார்முகில் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு..
No comments:
Post a Comment