கோத்தகிரியில் குடிபோதையில் காரை ஒட்டி வந்த நபரை பொதுமக்கள் மடக்கிபிடித்தனர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 September 2022

கோத்தகிரியில் குடிபோதையில் காரை ஒட்டி வந்த நபரை பொதுமக்கள் மடக்கிபிடித்தனர்.

கோத்தகிரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காமராஜர் சதுக்கத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை டானிங்டன் நோக்கி அதிவேகமாக கார் ஒன்று சென்றது அந்த கார் ஒட்டுநர் குடிபோதையில் காரை ஒட்டி வந்தது தெரியவந்தது ஒருவர் மீது லேசாக மோதியது மேலும் அங்கு நிறத்தி வைக்கப்பட்ட மேலும் நான்கு கார்களின் மீது மோதியது காரை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் கோத்தகிரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.


அதன் பேரில் அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் குடிபோதையில் இருந்த கார் டிரைவர் கோத்தகிரி அருகே பாமுடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் என்பது தெரியவந்தது.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி நகர ஒளிப்பதிவாளர் விஸ்னுதாஸ் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad