தற்போது கூடலூரில் பரவலாக மழை பெய்து வந்ததின் காரணமாக பள்ளி மாணவர்களின் வகுப்பறையில் மழை நீர் ஒலுகுவதால் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் திடீரென வகுப்பறைக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த கூடலூர் வட்டாட்சியர் சித்துராஜ் மற்றும் கூடலூர் டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று பள்ளி மாணவ மாணவியரின் பெற்றோருடன் நேரில் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். இதில் பெற்றோர் தரப்பில் பள்ளியின் மேற்கூரை 65 சீட்டுகள் போடப்பட்டுள்ள இது மிகவும் பழமையான சீட்டுகள் என்றும் இவை உடைந்து விரிசல் ஏற் பட்டு அதன் மூலமாக மழை காலங்களில் நீர் உள்ளே போவதால் பள்ளி மாணவ மாணவிகள் அமர்ந்து படிக்க இயலாத ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது என்றும் அதனை மாற்றி தர வேண்டும் என்றும் கேட்டனர்.
அதுபோல் கட்டிடம் 40 வருடங்களாக தலைமை வாய்ந்த கட்டிடம் என்பதால் அதனை சீரமைத்து தர வேண்டும் இல்லையெனில் அந்த கட்டிடம் அடுத்து மலைக்கு சரிந்து விழக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது இதை கவனத்தில் கொண்டு சீர் செய்து தருமாறும் பள்ளிக்கு செல்லக்கூடிய சிமெண்ட் சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளதனால் அதனையும் அமைத்து தர கோரிக்கை முன்வைத்தனர்.
இதில் வட்டாட்சியர் சித்திராஜ் அவர்கள் தற்சமயத்திற்கு இந்த 65 சீட்டுகளை மாற்றி அதன் பின்பு நடைபாதையை சீரமைத்து தருவதாகவும் இதனைத் தொடர்ந்து பின்பு இதனுடைய கட்டிடத்தை மாற்றி புது கட்டிடம் அமைப்பை தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெற்றோரிடம் வாக்குறுதியளித்தார், இதைபெற்றோர்கள் ஏற்றுக் கொண்டு கலைந்து சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே.எஸ்.டி மகேந்திரன்


No comments:
Post a Comment