எமரால்டு பகுதியில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 September 2022

எமரால்டு பகுதியில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மக்களுக்கு எவ்வாறு உதவுவது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி ஆனது நீலகிரி மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கிணங்க வருவாய் துறையினர் தீயணைப்புத் துறையினர் தன்னார்வலர்களுடன் இணைந்து பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது முள்ளீகூர் ஊராட்சிக்குட்பட்ட  எமரால்டு பகுதியில் நடைபெற்றது.

இந்த ஒத்திகையின் போது தீயணைப்பு துறை வருவாய்த்துறை தன்னார்வலர்கள் மின்சார துறை மருத்துவத் துறையினர் மேற்கண்ட 12க்கும் மேற்பட்ட துறைகள் இதில் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தினார்கள் இந்த விழிப்புணர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களும் தன்னார்வலர்களும் இந்த நிகழ்ச்சியானது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எங்களது பகுதியில் ஏதேனும் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்றால் உடனடியாக நாங்கள் அவர்களுக்கு முதலுதவி செய்ய உதவிகரமாக இருக்கும் இப்படிப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கும் நீலகிரி மாவட்டத்திற்கும் மற்றும் இன்றைய தினத்தில் பங்கேற்ற அரசு துறைகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

அவர்களுடன் சேர்ந்து நமது தமிழக குரல் இணையதள செய்திகள் சார்பாகவும் இன்றைய தினத்தில் ஒத்திகை நிகழ்ச்சி வழங்கிய அனைத்து துறைகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் போது மண்சரிவில் சிக்கிக்கொண்ட நபரை காப்பாற்றுவதும் மழைக்காலத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரை காப்பாற்றுவதும் செல்பி எடுக்கச் சென்றபோது தவறி விழுந்தவர்களை காப்பாற்றுவது என்பது போன்ற இன்றைய தினத்தில் இன்றியமையாத பல பயிற்சிகளை வழங்கிய அனைத்து துறைகளுக்கும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு சார்பாக மனமார்ந்த நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சி ஆனது எமரால்டு பகுதியில் சற்று நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது இது ஒத்திகை நிகழ்ச்சி போல் இன்றி நேரில் ஒரு நடந்த சம்பவத்தின் போது எவ்வாறு அரசுத் துறைகள் துரிதமாக செயல்படும் என்பதை நேரடியாக நமக்கு காண்பித்த அனைத்து அரசு துறைகளுக்கும் இந்த ஒத்திகை நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை பொதுமக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

அவர்களுடன் சேர்ந்து தமிழக குரல் இணையதள செய்திகள் சார்பாகவும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு சார்பாகவும் இந்த ஒத்திகை நிகழ்ச்சி பங்கேற்ற அனைத்து அரசு துறைகளுக்கும் தன்னார்வலர்களுக்கும் பொதுமக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு இன்னும் இது போன்ற ஒத்திகை நிகழ்ச்சிகளை நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுகிறோம்.


- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன். 

No comments:

Post a Comment

Post Top Ad