நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் அமைந்துள்ள புனித அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் திருவிழாவானது வருகின்ற 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருப்பதை முன்னிட்டு இன்றைய தினம் 18.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் திருப்பலியும் அதன் பின் கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த கொடியேற்ற நிகழ்ச்சியை எமரால்டு அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத்தந்தை பிரான்சிஸ் திரு.என்.சி.வி ராஜகுமாரன் அவர்கள் கொடியேற்றி துவங்கி வைத்தார் இந்த கொடியேற்ற நிகழ்ச்சியை பங்கின் பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்கள் பங்கின் இளைஞர் பேரவைகள் சேர்ந்த இளைஞர்கள் சிறந்த முறையில் செய்து இருந்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment