இளைஞர்நீதி (சிறார்களின் பராமரிப்பு, பாதுகாப்பு) சட்டம் 2015ன் படி நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டத்தினை மேலும் நன்முறையில் கொண்டுசெல்ல மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவானது மாவட்டஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் 12.09.2022 அன்று மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளும் பெருட்டு, குழந்தைகள் தொடர்புடைய துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப.. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
உடன் முதன்மை நடுவர், இளைஞர் நீதிக்குழுமம் திரு.தமிழினியன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) திருமதி.சோபனா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- உதகை நகர செய்தியாளர் கார்முகில் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment