நீலகிரி மாவட்டம் குன்னூர் - உதகமண்டலம் இடையே மலை ரயில் சேவை ரத்து. நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக பருவ மழை இயல்பை விட அதிகமா பெய்துவருகிறது நேற்று இரவு முதலே காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இன்று காலை கேத்தி - லவ்டேல் இடையே மலை ரயில் பாதையில் மரம் விழுந்ததால் ரயில்சேவை பாதிக்கப்பட்டது.
காலை 7.45 மணிக்கு குன்னூர் - உதகை மலை ரயிலும், 9.15 மணிக்கு உதகை -குன்னூர் மலை ரயிலும் ரத்து செய்யப்பட்டது. மரத்தை அகற்றி பாதையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- தமிழக குரல் செய்திகளுக்காக உதகை நகர செய்தியாளர் கார்முகில் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment