இந்த பணிகள் நிறைவு அடைந்து 1 ஆண்டுகள் ஆகியும், இதுவரை மக்கள் பயன் பாட்டிற்கு செயல் பட வில்லை. இது பற்றி அந்த பகுதி மக்களிடம் கேட்ட பொழுது இந்த மழை காலத்தில் பாதிப்பு உள்ளகி உள்ளோம் மேலும் தொடர் மழை காரணமாகவும் சாலைகள் பழுது அடைந்த காரணமாகவும், உதகை மற்றும் மஞ்சுர் மருத்துவ மனைக்கு மக்கள் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளகிறோம் எனவே தயவு செய்து விரைவில் அரசு அதிகாரிகள் மக்களின் அவல நிலையை கூர்ந்து கவனித்து சம்பந்த பட்ட அதிகாரிகள் அரசுக்கு தெரிவித்து துரித நடவடிக்கை எடுத்து மருத்துவமனையை செயல்பட செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் என்று கூறினர்.
அவர்களுடன் சேர்ந்து நமது தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு சார்பாகவும் இந்த மருத்துவமனையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இதனால் வரையும் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது ஏன் என்று உடனடியாக மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களின் பயன்பாட்டிற்காக அரசு கிட்டத்தட்ட 20 கோடி செலவில் செலவழித்துள்ளது இதன் உண்மையான பயன் இந்த மருத்துவமனை பயன்பாட்டிற்கு வந்தால் மட்டுமே ஆகவே இந்த மருத்துவமனையை உடனடியாக செயல்பட துரித நடவடிக்கை எடுக்குமாறு நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு சார்பாகவும் தமிழக குரல் இணையதள செய்தி குழுமபத்தின் சார்பாகவும் வேண்டுகோள் வைக்கிறோம்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு மற்றும் தலைமை செய்தியாளர் மகேந்திரன்...
No comments:
Post a Comment