நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பெயரில் வழங்கப்படும் நல்ஆசிரியர் விருதுக்கு 9 பேருக்கு விருது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 September 2022

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பெயரில் வழங்கப்படும் நல்ஆசிரியர் விருதுக்கு 9 பேருக்கு விருது.

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பெயரில் வழங்கப்படும் நல்ஆசிரியர் விருதுக்கு 9 பேர் தேர்வாகியுள்ளனர் இந்த விருதை நேற்றைய தினம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்ற  விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வழங்கினார். 


இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.மா. சுப்ரமணியம் அவர்கள் மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் மாண்புமிகு திரு பி கே சேகர்பாபு அவர்களும் மற்றும் அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர் இதில் எமரால்டு அரசு தொடக்கப் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் செல்வி. கிறிஸ்டினா சாரா அவர்களுக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது அவர்களுக்கு எமரால்டு சுற்றுவட்டார பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


அவர்களுடன் சேர்ந்து நமது தமிழக குரல் செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு சார்பாகவும் செல்வி. கிறிஸ்டினா சாரா அவர்களை இந்த விருது பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே.எஸ்.டி மகேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad