நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (26.09.2022) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்த 5 தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.ஜெயராமன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை நகர செய்தியாளர் கார்முகில் மற்றும் மாவட்ட செய்தி பிரிவு...
No comments:
Post a Comment