பேரறிஞர் அண்ணா அவர்களின்114,வது பிறந்த நாள் விழாவானது கூடலூர் பகுதிகளில் சிறப்பான முறையில் திமுக கட்சியினரால் கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் கூடலூர் காந்தி திடலில் வைக்கப்பட்டிருந்த அண்ணா திருவுருவப்படத்திற்கு வனத்துறை அமைச்சர் க.ராமசந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இவருடன் கூடலூர் முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் திராவிடமணி முன்னால் நகர செயலாளர் ராஜேந்திரன் பந்தலூர் நெல்லியாள நகராட்சியின் முன்னால் நகரமன்ற தலைவர் அமிர்தலிங்கம் கூடலூர் நகர செயலாளர் பாபு மற்றும் மகளிர் அணி மாணவர் அணி திமுக கட்சியின் பொருலாளர்கள் நகரகளை கிழக நிர்வாகிகள் என பலரும் அண்ணா உறுவப்படத்திற்கு மாழை தூவி மரியாதை செலுத்தினர்.
கூடலூருக்கு வந்த வனத்துறை அமைச்சர் க ராமசந்திரன் காலை முதல் நிகழ்வாக அண்ணா உறுவ படத்திற்கு மாழை அனிவித்து விட்டு மார்த்தோமோ நகரில் அண்ணா அவர்களின் பிறந்த நாள் நினைவாக சைக்கிள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் தோட்டக்கலை மலை பயிர் துறை கூடலூர் நீலகிரி மாவட்டம் பாரதிய ப்ராக்ரித்திக் கிரிஷி மேம்பாட்டு திட்டம் விழா நடைபெற்றது.
இந்த விழாவில். வந்தவர்களை திருமதி எஸ் ஷிபிலா மேரி அவர்கள் தோட்டக்கலை இணை இயக்குனர் உதகமண்டலம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித் அவர்கள் தலைமைய உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த விழாவில் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பணத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் அவர்கள் கூறும்போது போது இயற்கை உரம் இந்த உலகத்தில் வளரக்கூடிய உணவுகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருகிறது என்றும் இந்த விவசாயங்களை இயற்கை நிறைந்த விவசாயத்தை அந்த காலத்தில் உள்ள மனிதர்கள் இயற்கை உரங்களை முறமிட்டு பயிர் செய்து அதனை மக்களுக்கு வழங்கி வந்தனர் இதனால் நோய் என்பதே மக்களிடையே குறைவாக இருந்தது ஆனால் தற்போது டிஜிட்டல் காலம் என்பதால் அதிக விஷக்கள்ளி மருந்துகளை அடித்து குறிப்பாக ஆறு மாத காலத்திற்கு வரக்கூடிய பயிர்கள் மூன்று மாதத்தில் விளைவிக்கக் கூடிய அளவில் விஷ தன்மை மிகுந்த பூச்சிக்கொல்லி மருந்து அடித்து அவற்றை சந்தையில் விற்பனை செய்து வருகின்றன இதனால் இந்த காய்கறி பழங்களை வாங்கி உண்பதால் பல்வேறு நோய்கள் நம்மை தாக்கப்படுகிறது என்று இதனால் தற்போது அதிகமானவர்கள் நோய் தாக்கப்பட்டு பலன் இல்லாமல் மனிதர்கள் வெகு விரைவில் அழியக்கூடிய சூழல் ஏற்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்பேற்பட்ட ஒரு சூழல் ஏற்பட்டு இருக்கின்ற நிலையில் நாம் அனைவரும் இயற்கையான ஆர்கானிக் காய்களை விளைவிக்க வேண்டும் என்று அவர் இக்கூட்டத்தில் விவசாயிகள் மத்தியில் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் விவசாயத்திற்கு பயன்படுத்க்கூடிய வாகனத்தின் சாவியை கிரிஷி மேம்பாட்டு குழுவிற்கு வழங்கினார் பின்பு இயற்க விவசாய உற்பத்தியாளர்க்கு மருந்து தெளிப்பான் டேங்குகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து அதே பள்ளி வழாகத்தில் சீனிவாசன் சேவை அறக்கட்டளை சார்பாக பழங்குடியினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய சத்துணவு வழங்கும் திட்டம் தோப்பு விழா ஸ்ரீ மதுரை குங்குமலா பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களை சீனிவாசன் சேவை அறக்கட்டளையின் இயக்குனர் சுந்தர்ராஜன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் கூடலூர் வட்டார ஊராட்சி தலைவர் கீர்த்தனா ..ஸ்ரீ மதுரை ஊராட்சி மன்ற தலைவர் சுனில் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப அம்ரித் அவர்கள் தலைமை உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து வனத்துறை அமைச்சர் கா ராமசந்திரன் அவர்கள் ஊட்டச்சத்து பற்றி விளக்க உறையாற்றினார் நாம் சரியான நேரத்தில் சரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் நீங்கள் சத்தாண உணவுகளை சாப்பிடாததால் உடல் பழகினத்துக்கு ஆளாகி விடுகிறீர்கள் உணவுகளில் பழவகைகள் கீரைகள் உலர் திராட்சை முந்திரி போன்ற விதைகள், முட்டை பால் போன்றவை சாப்பிட வேண்டும் சாப்பிட கூடாதவைகள் கெமிக்கல் கழந்த குளிர்பானம் குர்க்குரே ரசாயனம் கலந்த மிட்டாய்கள் போன்றவை சாப்பிடக் கூடாது என கேட்டுக் கொண்டார்.
பின்பு 311 பழங்குடியினர்க்கு தானிய வகை கலந்த மாவு பைகள் ஒரு வருடத்திற்கு பயன் படுத்தும் வகையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சத்துமாவை பயன் படுத்திய பயனாளிகள் கருத்துரை வழங்கப்பட்டது.. நிகழ்ச்சியில் இறுதியாக ஸ்ரீ மதுரை ஊராட்சி மன்ற தலைவர் சுனில் குமார் நன்றி உரை வழங்கினார் இத்தோடு நிகழ்ச்சிய இனிதே நிறைவு பெற்றது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா மற்றும் நீலகரி மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment