நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் அதிகரித்து தொடர்ந்து ஆறாவது நாளாக பெய்து வருகிறது. இந்நிலையில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் மண்சரிவு, மரங்கள் விழுந்தும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் தங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் பந்தலூர் அருகே உள்ள கூவமூலா பழங்குடியின கிராமத்தில் குடியிருப்பிற்குள் மழைநீர் புகுந்து வெள்ளம் சூழ்ந்ததால், இதுதொடர்பாக வருவாய் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நான்கு குடும்பங்களை சேர்ந்த பதினான்கு பேரை மீட்டு உணவு,போர்வை போன்ற பொருட்களை வழங்கி பத்திரமாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நெல்லியாளம் நகரச் செயலாளர் சேகர் தலைமையில் முகாமில் தங்க வைக்கப்பட்ட வரை இன்று திமுக மாவட்ட செயலாளர் முபாரக் அவர்கள் நேரில் சென்று நிவாரணப் வழங்கினார் உடன் கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன்
No comments:
Post a Comment