நீலகிரி மாவட்டம் பந்தலூர் கூவமூலா பகுதியில் மழை நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் அப்பகுதி மக்களை பத்திரமாக மீட்பு.
பந்தலூர் கூடலூர் பகுதிகளில் அதி தீவிர கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது இன்னிலையில் பந்தலூர் பகுதிகளில் மண் சரிவு மரம் விலுவது பேன்ற பேரிடர்கள் நடந்த வன்னம் உள்ளது.
இன்னிலையில் நேற்றைய தினம் பந்தலூர் பகுதியில் இரவு கனத்த மழை பெய்தது இதனால் கூவ மூலா பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் சூழ்ந்தது இச்சம்பவத்தை அறிந்தவர்கள் உடனே சம்மந்த பட்ட அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டு பேரிடர் மீட்பு குழ சம்பவ இடத்துக்கு சென்று (14 பேர்) நான்கு குடும்பங்களை மீட்டு அவர்கள் அனைவரையும் பந்தலூர் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று முதலுதவி செய்து அவர்களை பந்தலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் தலைமை ஒளிப்பதிவாளர் அருள்தாஸ்.
No comments:
Post a Comment