கூடலூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது .இதனால் கூடலூரில் ஏகப்பட்ட சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மழையினால் வீடுகள் இடிந்து விழுவது மரங்கள் சாய்வது குடியிருப்பு பகுதிக்குள் நீர் புகுந்து விடுவது என பல பாதிப்புகள். இன்னிலையில் கூடலூர் பகுதியில் தமிழக அரசால் நடத்தக்கூடிய புத்தக நிலையம் ஒன்று செயல் பட்டு வருகிறது.
இந்த நூலகத்தை அப்பகுதி மக்கள் பயன் படுத்தி வருகின்றனர் 55 வருடகாலமாக சிறப்பாக செயல் பட்டு வந்தது இங்கு அரியவகை புத்தகங்கள் கிடைக்கக் கூடிய இடம். இங்கு பள்ளி மாணவர் முதல் பெரியவர்கள் அலுவலர்கள் என அனைவரும் காலை மாலை இரு வேலை இங்கு வந்து தேவையான புத்தகங்களை வாங்கி செல்வார்கள். இன்னிலையில் தற்போது கூடலூரில் மழை அதிகளவு பெய்து வருவதால் இங்கு உள்ள நூலகத்திற்கு யாரும் வரவில்லை .
இன்னிலையில் இன்று மாலை கன மழை பெய்ததின் காரணமாக நூலகத்தின் பின்புரம் உள்ள பக்கவாட்டில் இடிந்து விழந்தது இங்கு பல வகை புத்தகங்கள் மழை நீரினால் நனைந்து வீனானது . இன்னிலையில் உயிர் சேதம் ஏது நடைபெறவில்லை நூலகம் இடிந்து விழுந்ததால் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன்
No comments:
Post a Comment